திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் எட்டி மரம். எனவே, அப்பெயராலேயே 'எட்டிகுடி' என்று அழைக்கப்படுகிறது.
ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீதமர்ந்து காட்சியளிக்கிறார். முத்தரையர் என்ற குறுநில மன்னன் எட்டிக்குடியை ஆட்சி செய்தபோது தெய்வ அருள் பெற்ற சிற்பி ஒருவன் பன்னிரு திருக்கரங்களுடன் ஆறுமுகப் பெருமான் சிலையை உருவாக்கினான். சிற்பி சிலையை வடிக்கும்போதே அதில் இரத்த ஓட்டம் இருப்பதையும், வியர்வை கசிவதையும் கண்டு வியப்புற்றார்.
அதனால் சிற்பி மயில் உயிர் பெற்று முருகப் பெருமான் சென்று விடுவாரோ என்று எண்ணி சிலையை வடிக்கும்போதே மயிலை சங்கிலியால் கட்டிய நிலையில் வடித்தார். இறுதியாக மயிலின் கண்களைத் திறந்தவுடன் மயில் பறக்க முற்பட்டது. சிற்பி சிறிதும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த சிற்றுளியால் மயிலின் கால் நகத்தை வெட்டினார். எனவே, மயிலால் பறக்க முடியாமல் போய்விட்டது. அத்தகைய சிறப்புப் பெற்ற முருகப் பெருமான் இத்தலத்தில் காட்சி தருகின்றார்.
|